A special psychological counseling and guidance workshop was recently held with great success for the parents of female students in Grades 9, 10, and 11.
Renowned psychological counselor Ash-Sheikh Irhan Sharabi graced the event as the resource person. During his address, he provided highly effective advice and practical guidance on raising children appropriately amidst modern challenges, emphasizing the importance of understanding their psychology. In particular, he clearly outlined the patience, affectionate approach, and effective communication parents must adopt when guiding teenage girls.
The guidance session was exceptionally well-received, earning unanimous praise from the attendees. Parents expressed their satisfaction, noting that the session provided clear, practical solutions to the challenges they faced regarding their children's education and psychological well-being.
To continuously enhance the mental well-being of the students in these grades, ongoing psychological counseling classes have been systematically organized and conducted at the school. It is noteworthy that this special awareness session for parents was implemented as a key phase of this continuous initiative.
The exceptional dedication demonstrated by the school administration—not only towards the students' academic progress but also their mental well-being—has garnered widespread appreciation from various stakeholders.
தரம் 9, 10 மற்றும் 11 ஆகிய ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவியரின் பெற்றோர்களுக்கான விசேட உளவள ஆலோசனை மற்றும் வழிகாட்டல் செயலமர்வொன்று அண்மையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரபல உளவள ஆலோசகர் அஷ்-ஷெய்க் இர்ஹான் ஷரபி அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் தனது உரையில், தற்போதைய நவீன சவால்களுக்கு மத்தியில் பிள்ளைகளை எவ்வாறு சரியான முறையில் வளர்ப்பது, அவர்களது உளவியலைப் புரிந்து கொண்டு எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பில் மிகவும் காத்திரமான ஆலோசனைகளையும் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்கினார். குறிப்பாக, விடலைப் பருவத்தில் (Teenage) உள்ள பெண் பிள்ளைகளைக் கையாளும் போது பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொறுமை, அன்பான அணுகுமுறை மற்றும் அவர்களுடனான சிறந்த தொடர்பாடல் குறித்து அவர் மிகத் தெளிவாக விளக்கினார்.
இந்த வழிகாட்டல் அமர்வானது பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், பலரது ஏகோபித்த பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது. தமது பிள்ளைகளின் கல்வி மற்றும் உளநலன் சார்ந்து தமக்கு இருந்த பல நடைமுறைச் சிக்கல்களுக்கு இந்த அமர்வு தெளிவான தீர்வுகளைத் தந்ததாகப் பெற்றோர் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
குறித்த வகுப்புகளில் பயிலும் மாணவியரின் உளநலனை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்குத் தொடர்ச்சியான உளவள ஆலோசனை வகுப்புகள் பாடசாலையில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. மாணவியருக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடர் செயற்றிட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகவே, பெற்றோரைத் தெளிவூட்டும் இந்த விசேட அமர்வும் ஒரு தொடராக முன்னெடுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மாணவியரின் கல்வியோடு மாத்திரமன்றி, அவர்களது உளநலனிலும் கல்லூரி நிர்வாகம் காட்டிவரும் இந்த அதீத அக்கறையானது பல தரப்பினரின் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.
